சல்மான் கானுக்கு வில்லனாகும் பஹத் பாசில்
விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளி அடுத்து இயக்கும் படத் தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். ‘ஜவான்’ படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் 2-வது இந்தி படம் இது.இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. சல்மான் கான், நயன்தாரா தொடர்பான காட்சிகள் படமாகி வருகிறது.இந்நிலையில் இதில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் பஹத் பாசிலிடம் பேசி வருகின்றனர். அதோடு நடிகர் அரவிந்த் சாமி முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
Prev Post
Next Post