மமிதா பைஜூவின் ட்யூட் பட கேரக்டர் வெளியீடு
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிகிறார். இதில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
இந்நிலையில் படத்தின் ஹீரோயின் மமிதா பைஜுவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கேரக்டருடன் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.இதில் குறள் என்ற கேரக்டரில் மமிதா நடிக்கிறார்.இப்படம் 5 மொழிகளில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.