ஜீ5 மற்றும் ஜீ தமிழில் மாமன் படம்
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாமன் படம் விரைவில் ஜீ 5 ஒடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான “மாமன்” படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.இதனால் ஒடிடி உரிமையோடு ஜீ தமிழ் தொலைக்காட்சி சாட்டிலைட் உரிமையையும் கைப்பற்றியது. மே மாதம் தியேட்டர்களில் வெளியான இப்படம் ஜீ நேயர்களுக்காக பிரத்தியேகமாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இப்படத்தின் பிரீமியர் தேதி பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
Next Post