லோகேஷ் கனகராஜின் டிசி பட ரிலீஸ் அப்டேட்
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்,முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்துள்ள படம் “டிசி”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், தேவதாஸ் என்ற கேரக்டரில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக நடிகை வாமிகா கபியும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும் அதில் இடம் பெற்ற ”ராகா ஆஃப் ரிவெஞ்” எனும் பின்னணி இசை சமூக ஊடகங்களில் வைரலானது.இந்த நிலையில்,இப்படம் வரும் 31ம் தேதி வெளியாகும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Next Post