Take a fresh look at your lifestyle.

அஜித் 64-வது பட தயாரிப்பாளர் இவரா?

8

அஜித் 64-வது பட தயாரிப்பாளர் இவரா?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த குட் பேட் அக்லி படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்தப் படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அடுத்த படத்தையும் அஜித் ஆதிக்-ஐ வைத்து எடுக்க முடிவு செய்தனர். ஆனால் அவர்கள் திடீரென விலகிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஏகே 64 படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. அதன் பிறகு ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கப் போவதாக தகவல் வந்தது. அதுவும் அஜித் சம்பள பிரச்சனையால் முன் தயாரிப்பு பணியோடு நின்று விட்டது. இந்த நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் அனில் சுங்கரா இப்படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். அவருடன் அஜித்தும் இணைந்து தயாரிக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காரணம், அஜித்துக்கு சம்பளம் 200 கோடி கொடுத்து படப்பிடிப்பை நடத்த தயாரிப்பு நிறுவனங்கள் தயங்குவதால்,அஜித் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.