Take a fresh look at your lifestyle.

லட்சுமி காந்தன் கொலை வழக்கு- விமர்சனம்

1

லட்சுமி காந்தன் கொலை வழக்கு- விமர்சனம்
1970-ல் கிராமத்தில் படித்துவிட்டு வேலை கிடைக்காத விரக்தியில் இருக்கும் வெற்றி, அவரது நண்பர் மாறனுடன் சேர்ந்து சிறு திருட்டுகளை செய்கிறார்.ஒரு கட்டத்தில் சூழ்நிலை அவரை கொலை செய்யும் அளவுக்கு தள்ளுகிறது. கடன் கொடுத்த ஜமீன்தார் கவிதா பாரதியை கொலை செய்த குற்றத்திற்காக அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முதல் நாள் இரவு நீதிபதி,மருத்துவர், ஜெய்லர் ஆகியோர் வெற்றியை சந்திக்கிறார்கள். அப்போது நடக்கும் ஒரு விவாதம் கதையை வேறு தளத்திற்கு எடுத்துச்செல்கிறது. அது என்ன? என்பதே படத்தின் மீதி கதை. சட்டத்தின் நோக்கம் பழிவாங்குவது அல்ல; மனிதனை திருத்தி சமூகத்தில் மீண்டும் வாழ வைப்பதே என்ற கருத்தை முன்வைத்து திரைக்கதையை எழுதியுள்ளார் இயக்குநர் தயாள் பத்மநாபன். இருப்பினும் பல சீன்கள் நாடகம் பார்ப்பது போல் உள்ளது. வெற்றி நடிப்பு இயல்பாக உள்ளது. லிசி ஆண்டனி, பிரிகிடா சாகா, கவிதா பாரதி, சரவணன், சுப்பிரமணியம் சிவா மற்றும் ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். எம்.வி. பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு மற்றும் தர்புகா சிவாவின் படத்துக்கு பலம்.