சி எம் கம்மிங்: ஜன நாயகன் அப்டேட்
முதல்வர் விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கிய படம் ‘ஜன நாயகன்’.இப்படம் கடந்த ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்று கிடைக்காததால் ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது ஏழு மாத கால போராட்டத்திற்கு பிறகு, இப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’சான்றிதழை வழங்கி உள்ளது. மூன்று மணி நேரம் மூன்று நிமிடம் ஓடும் அளவிற்கு ஜனநாயகன் படம் சென்சார் செய்யப்பட்டு உள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் கே வி என் மீடியா புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதில் சி எம் கம்மிங் என்ற வாசகத்துடன் போஸ்டரை வெளியானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தை வரும் 24 ஆம் தேதி அன்று வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது. விஜய் நடிகராக இருந்து நடித்த கடைசி படம் தற்போது அவர் முதல்வரான உடன் முதல் படமாக ரிலீஸ் ஆக உள்ளது.
Prev Post