Take a fresh look at your lifestyle.

கிருஷ்ணாவதாரம் ட்ரெய்லர் வெளியீடு

87

கிருஷ்ணாவதாரம் ட்ரெய்லர் வெளியீடு
சினிமாவும் ஆன்மிகமும் ஒன்றிணைந்த அரிய தருணமாக, கிருஷ்ணாவதாரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் புனிதமான கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியிடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இந்த பக்தி அனுபவத்தில் மூழ்கினர். 3 பகுதிகளாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் அத்தியாயம் கிருஷ்ணாவதாரம், வரும் மே 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஹார்திக் கஜ்ஜர் இயக்க, கிரியேட்டிவ்லாண்ட் ஸ்டூடியோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சஜன் ராஜ் குருப் மற்றும் ஷோபா சாந்த் தயாரித்துள்ள னர். பிரகாஷ் கபாடியா மற்றும் ராம் மோரி எழுத்துகளில் உருவான இந்த படத்திற்கு, அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்ய, பிரசாத் எஸ் இசையமைத்துள்ளார்.