Take a fresh look at your lifestyle.

இனி நானும் சேச்சி தான்;துஷாரா விஜயன்

95

இனி நானும் சேச்சி தான்;துஷாரா விஜயன்
பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் துஷாரா விஜயன். தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’, வசந்தபாலன் இயக்கிய அநீதி, த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்த வேட்டையன் போன்ற படங்கள் மூலம் புகழ்பெற்ற இவர், மலையாள சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.இயக்குனர் பால் ஜார்ஜ் இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகும் “காட்டாளன்” என்ற மலையாளத் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார். யானை தந்தம் கடத்தல் பின்னணியிலான இந்த அதிரடித் திரில்லர் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.