Take a fresh look at your lifestyle.

கமல்தான் என் ரோல் மாடல்: லோகேஷ் கனகராஜ்

36

கமல்தான் என் ரோல் மாடல்: லோகேஷ் கனகராஜ்
மேயாதமான், ஆடை, குலு குலு போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் தற்போது ‘29’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் விது, பிரீத்தி அஸ்ராணி ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்பு ராஜின் ஸ்டோன் பெஞ்ச், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். வரும் 8-ந் தேதி படம் ரிலீசாக உள்ளது. இதையொட்டி நடந்த ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் பேசியது, சினிமாவில் எனக்கு அடைக்கலம் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் உடன் சேர்ந்து படம் தயாரித்துள்ளது மகிழ்ச் சியாக இருக்கிறது. நாம் வளரும் போது நம்முடன் இருப்பவர்களையும் வளர்த்து விட வேண்டும். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் போட வேண்டும் என்பதை கமல்ஹாசனிடம் இருந்துதான் நான் கற்றுக் கொண்டேன். இந்த விஷயத்தில் அவர்தான் என்னுடைய ரோல் மாடல் என்றார்.