சூப்பர் ஹீரோவாக அதிரடி காட்டியுள்ள கல்யாணி பிரியதர்ஷன்
துல்கர் சல்மானின் வெய்ஃபரர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் லோகா – சேப்டர் 1 : சந்திரா. இது துல்கரின் 7வது தயாரிப்பாகும். இந்தப்படம், முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகும். டொமினிக் அருண் எழுதி இயக்கியுள்ள இந்த சூப்பர் ஹீரோ படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கல்யாணி, சூப்பர் ஹீரோவாக அதிரடி அவதாரத்தில் நடித்துள்ளார். இதன் டீசர் வெளியாகி, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இந்த படம் ஓணம் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது.
Next Post
