சூர்யா மேல் எனக்கு ஒரு கிரஷ்: அர்ஷா பைஜூ ஓப்பன் டாக்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அர்ஷா சாந்தினி பைஜூ, ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
படத்தில் அவருடைய பெர்ஃபார்மென்ஸ் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது. இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி வருமாறு, தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எனது ஆசை தற்போது ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் திறமைக்கு மதிப்பளிக்கிறார்கள்.தமிழில் விஜய் சேதுபதி, சிவகார்த்த்கேயன் ஆகியோருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ஆசை. பிடித்த நடிகர்கள் என்றால் எனக்கு சூர்யா மீது கிரஷ் இருந்தது. நான் கல்லூரியில் படிக்கும் போது சூர்யாவின் தீவிர ரசிகை. அதனால், அவருடனும் நடிக்க வேண்டும், அதற்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
Prev Post
