ஜான்வி கபூருக்கு இப்படி ஒரு ஆசை!!
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ள பரம சுந்தரி படம் கடந்த 29-ந் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சுவாரசியமான பகிர்ந்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், திருமணமான பிறகு எனக்கு 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் 3 எனது அதிர்ஷ்ட எண் ஆகும். என் இரண்டு குழந்தைகள் சண்டைபோடும் போது மூன்றாவது குழந்தை அவர்களை சமாதானப்படுத்தும். இதனால் மூன்று குழந்தைகளுக்கும் ஒரு துணையும் ஆதரவும் கிடைக்கிறது என்று கூறினார். ஜான்வி கபூர் ஏற்கனவே தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் திருப்பதியில் குடியேற விரும்புவதாக கூறியிருந்தார்.
Next Post