Take a fresh look at your lifestyle.

எஸ் ஜே சூர்யா தான் எனக்கு இன்ஸ்பிரேஷனா? டபுள் ஆக்குபன்சி இயக்குனர் அஸ்வின் கந்தசாமியின் தடாலடி பேட்டி

1

எஸ் ஜே சூர்யா தான் எனக்கு இன்ஸ்பிரேஷனா? டபுள் ஆக்குபன்சி இயக்குனர் அஸ்வின் கந்தசாமியின் தடாலடி பேட்டி

நடிகை குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் மற்றும் அருண்குமாரின் பென்ஸ் மீடியா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன படம் டபுள் ஆக்குபன்சி. இந்த படத்தில் சந்தோஷ், சம்யுக்தா விஸ்வநாதன், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன், வி.டி.வி. கணேஷ், பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசை அமைத்திருந்தார். வித்தியாசமான ஃபேண்டஸி கதை களத்துடன் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பையும், அதே நேரம் விமர்சனத்தையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை பற்றி அறிமுக இயக்குனர் அஸ்வின் கந்தசாமியிடம் பேசிய போது அவர் அளித்த பதில்கள் வருமாறு:

கேள்வி: இந்த கதைக்கான தீப்பொறி எங்கிருந்து வந்தது?

பதில்: பெருசா யோசிச்சு இந்த கதையை எழுதல, நானும் என் பிரண்டும் விளையாட்டா பேசிகிட்ட கான்வர்சேஷன் தான் இந்த படத்தின் கதை. அவனுடைய ஒரு பொருள் என்னிடம் இருந்தது. அதை உடனே கொடுக்க முடியல, அடுத்த மாதம் தர்றேன்னு சொன்னேன். பொறுமையா தா மச்சி, அதுக்குள்ள நீ என்ன பொண்ணாவா மாற போறன்னு அவன் சொன்ன அந்த விஷயம் என் மனதுக்குள் ஒரு ஸ்பார்க் ஆக வந்தது. நானே கண்ணாடி முன் நின்று கொண்டு பெண்ணாக மாறினால் எப்படி இருப்பேன், என்ன செய்வேன் என யோசித்து இந்த கதையை எழுதினேன்.

கேள்வி: முதல் படத்திலேயே இது போன்ற கதையை தேர்வு செய்தது ஏன்?
பதில்: நம்ம டே டு டே லைஃப்ல பார்க்கிற விஷயத்தை தாண்டி ஏதாவது புதுசா செய்யணும்னு நினைச்சேன். வழக்கமான காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் இல்லாம புதுசா இந்த மாதிரி ஒரு ஃபேண்டஸி விஷயத்தை சொன்னா இப்ப இருக்குற ஜெனரேஷன் ரசிப்பாங்கன்னு தோணுச்சு. இந்த ரீல்ஸ் உலகத்துல இதுபோல ஒரு விஷயத்தை சொன்னாதான் ஆடியன்ஸ் ஸ்வைப் பண்ணாம படத்தை பார்ப்பாங்க. இன்னைக்கு தியேட்டர்ல படம் பாத்துட்டு வர அத்தன ஆடியன்ஸும் படம் வித்தியாசமா, புதுசா இருந்துச்சில்ல அப்படின்னு சொல்றத கேக்குறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுக்காகத்தான் இந்த கதையை செலக்ட்‌ பண்ணினேன்.

கேள்வி: எஸ் ஜே சூர்யா இயக்கி நடித்த நியூ படத்தின் இன்ஸ்பிரேஷனா இது?

பதில்: நானும் அந்த படத்தை பார்த்திருக்கேன். ஆனா அதனால இந்த கதையை எழுதல, நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நானும் என் பிரண்டும் பேசிக்கிட்டு இருந்தப்ப மைண்ட்ல வந்த கதை. இருந்தாலும் அவ்வளவு பெரிய இயக்குனரின் படத்தோட என் படத்த கம்பேர் பண்ணி பேசுறது எனக்கு சந்தோஷம் தான். அந்த படத்தின் கதைக்கும் இந்த கதைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

கேள்வி: உங்களின் அடுத்தடுத்த கதைகள் எப்படி இருக்கும்?
பதில்: எனக்கு ஆக்ஷன் பிடிக்கும், அதனால ஒரு ஆக்ஷன் கதையும் வச்சிருக்கேன். அதேபோல் லவ் ட்ராமா சப்ஜெக்ட்டும் இருக்கு. இது வழக்கமான யூத் லவ்-வும் இல்லாமல், ரொம்ப ஏஜ்ட்.லவ்-வும் இல்லாமல், ஒரு மிடில் ஏஜ் லவ் ஸ்டோரி இருக்கு. படமா எடுத்தா ரொம்ப சூப்பரா வரும். இதுபோல் நிறைய கதைய யோசிச்சு ஒன் லைன் ஸ்டோரியா வச்சிருக்கேன்.

பாக்ஸ்

ரஜினிக்கும் கதை ரெடி…

சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கும் ஒரு செம கதை வச்சிருக்கேன். எனக்கு வெறும் பதினோரு நிமிஷம் டைம் கொடுத்தா அந்த கதையை நான் நரேட் பண்ணுவேன். அவர் எதிர்பார்க்கிற எல்லா விஷயத்தையும் அதில் என்னால கொடுக்க முடியும். வெறும் 11 நிமிஷம் மட்டும் போதும் சூப்பர் ஸ்டாரை இம்பிரஸ் பண்ணுவேன்.