Take a fresh look at your lifestyle.

அடுத்த படத்தில் தமிழில் பேசுவேன்: கயாடு லோகர்

3

அடுத்த படத்தில் தமிழில் பேசுவேன்: கயாடு லோகர்
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இதில் கதாநாயகியாக கயாடு லோகர் நடிக்க, மேலும் விஜயராகவன், பாபுராஜ், அலெக்சாண்டர் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சிகியூப் ப்ரோஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் 10-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கயாடு லோகர் கூறியது, இது என்னுடைய 3-வது மலையாள படம்.இதில் என்னுடைய கேரக்டர் வித்தியாசமானது.என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானதும் கூட. டொவினோ தாமஸ் சிறந்த திறமையான நடிகர். எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும். அடுத்து வரும் போது நன்றாக தமிழில் பேசுவேன் என்றார்.