Take a fresh look at your lifestyle.

மிரட்டல் லுக்கில் அருள்தாஸ்

2

மிரட்டல் லுக்கில் அருள்தாஸ்
தமிழ் சினிமாவில் வில்லன்,குணசித்திர கேரட்டர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அருள்தாஸ். சமீபத்தில் வெளியான ‘தாய்க்கிழவி’ படத்தில் அவரின் கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் ‘ரீயூனியன்’ என்ற படத்தில் அருள்தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ‘ஹங்கர்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்துள்ள இந்த படத்தை சாட்ஸ் ரெக்ஸ் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு விக்கி மேக் ஒளிப்பதிவு செய்ய, ராக்கி டிஜே இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதில் மிரட்டல் லுக்கில் அருள்தாஸ் காணப்படுகிறார்.