Take a fresh look at your lifestyle.

இனி முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் கிரித்தி ஷெட்டி

46

இனி முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் கிரித்தி ஷெட்டி
லிங்குசாமி இயக்கத்தில் தி வாரியர் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர் கிரித்தி ஷெட்டி. தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி படத்தில் நடித்தார். தற்போது கார்த்தியுடன் வா வாத்தியார், ரவி மோகனுடன் ஜினி, பிரதீப் ரங்கநாதருடன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், 2021-ம் ஆண்டு நானியுடன் ஷியாம் சிங்காராய் என்ற படத்தில் முத்தக்காட்சியில் நடித்திருந்தேன். அப்போது பள்ளிப்படிப்பை மட்டும் முடித்து இருந்தேன்.17 வயதில் முத்த காட்சியில் நடித்தது ரொம்ப அசவுகரியமாக இருந்தது. அதன் பிறகு இது போன்ற முத்த காட்சிகளில் நடிக்க கூடாது என முடிவு செய்தேன்.இனிமேல் முத்தக்காட்சிகளிலோ, புகைப்பிடிக்கும் காட்சிகளிலோ நடிக்க மாட்டேன் என்றார்.