Take a fresh look at your lifestyle.

லோகா அத்தியாயம்- 1 விமர்சனம்

41

லோகா அத்தியாயம்- 1 விமர்சனம்
சந்து சலீம்குமார்,அருண் குரியன்,நஸ்லென் ஆகியூர் தங்கி இருக்கும் வீட்டிற்கு எதிரே கல்யாணி பிரியதர்ஷன் குடியேறுகிறார். அவரை கண்டதும் நஸ்லெனுக்கு அவர் மீது தனி ஈர்ப்பு ஏற்படுகிறது.இந்நிலையில் மனிதர்களை கடத்தி அவர்களின் இதயத்தை திருடும் கும்பலால் கல்யாணிக்கு திடீரென பிரச்சினை ஏற்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி சாண்டிக்கும், கல்யாணி பிரியதர்ஷனுக்கும் மோதல் உருவாகிறது. அந்த மோதலின் போது அவருக்கு அபூர்வ சக்தி இருப்பது தெரிய வருகிறது.அந்த சக்தி எப்படி வந்தது? உண்மையில் கல்யாணி பிரியதர்ஷன் யார்? என்பதே படத்தின் மீதி கதை. சூப்பர் ஹீரோயினாக சந்திரா கேரக்டரில் கல்யாணி பிரியதர்ஷன் அசத்தியுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி கிளப்பி இருக்கிறார். அதேபோல் நஸ்லென், சந்து சலீம்குமார்,சாண்டி ஆகியோரின் நடிப்பு சிறப்பு. டொவினோ தாமஸ், துல்கர்சல்மான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வருவது ரசிக்க வைக்கிறது.சூப்பர் மேன் கதையில் கல்யாணியை சூப்பர் உமனாக மாற்றி டொமினிக் அருண் இயக்கி இருக்கிறார் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு கதையோடு பார்வையாளர்களை பயணிக்க வைக்கிறது.