Take a fresh look at your lifestyle.

தஞ்சை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

10

அலட்சியத்தோடும் – ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, திமுக தலைவர் M. K. Stalin அவர்களின் வழிகாட்டுதல்படி, கழக உடன்பிறப்புகள் – தோழமை இயக்கத்தினர் – விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து தஞ்சை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினோம். ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி, வறண்ட காவிரியாக காட்சி அளிப்பதற்கு இந்த ஆளும் ஆட்சியாளர்களே காரணம்.சோறு போடும் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும்போது Reels போடும் முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினோம்.விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க வேண்டும்,டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்,ஆகிய கோரிக்கைகளை இந்த முதலமைச்சர் உடனே நிறைவேற்ற வேண்டும் என உரையாற்றினோம். சட்டமன்றம் – நீதிமன்றம் – மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் விவசாயிகள் பிரச்னைகளுக்காக தி.மு.க கழகத்தின் குரல் என்றைக்கும் ஒலிக்கும்! உதயநிதி ஸ்டாலின்.