நடிப்பிற்காக எவ்வளவு கஷ்டப்படவும் தயார்: நிமிஷா சஜயன்
மலையாள நடிகையான நிமிஷா சஜயன், எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் ஜோடியாக சித்தா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான மிஷன்: சாப்டர் 1,நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வாவுடன் ‘டிஎன்ஏ’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது மணிகண்டன் ஆனந்தன் இயக்கத்தில் அசோக் செல்வனுடன் ஒரு ரொமான்டிக் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சாருகேஷ் சேகர் இயக்கியுள்ள
லெகஸி என்ற இணையத் தொடரில் நடிகர் மாதவனுக்கு ஜோடியான நடித்துள்ளார். இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.நெட்பிளிக்ஸில் இந்தத் தொடர் நேரடியாக வெளியாகிறது. இந்த நிலையில் நிமிஷா சஜயன் அளித்த சமீபத்திய பேட்டியில், நடிப்பிற்காக எவ்வளவு கஷ்டப்படவும் தயாராக இருப்பதாகவும், விமர்சனங்கள் தன்னை பாதிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Prev Post
Next Post