அரசன் படத்தில் சிம்பு ட்ரிபிள் ஆக்சன்
இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அரசன் படம் உருவாகிறது.இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி, சில நாள்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், சிம்பு, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்தனர்.வடசென்னை உலகுடன் தொடர்புடைய கதையாக உருவானாலும் நடிகர் தனுஷ் சிறையிலிருக்கும் போது அரசனின் கதை நடக்கிறது. இதில், இடம் பெறும் விஜய் சேதுபதியின் காட்சிகள் மிரட்டலாக இருக்கும் எனத் தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், அரசன் திரைப்படத்தில் 3 தோற்றங்களில் நடிக்க உள்ளதாகவும் அதற்காக உடல் எடையைக் குறைக்கும் பணிகளில் இருப்பதாகவும் நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். கடந்த 3ம் தேதி தனது 44 வது பிறந்த நாளை சிம்பு கொண்டாடியது குறிப்பிடத்தக்கது
Next Post