வித் லவ் -விமர்சனம்
திருச்சியில் படித்துவிட்டு சென்னைக்கு வந்த அபிஷன் ஜீவிந்த் பெண் பார்க்கப் போகிறார். அவர் பார்க்கப் போன பெண் தனது பள்ளி தோழி அனஸ்வரா ராஜன் என தெரிய வருகிறது. அப்போது இருவரும் பள்ளி பருவ காலத்தில் ஒரு காதல் பற்றி பேசுகின்றனர். இந்த நிலையில் அனஸ்வரா கல்யாணத்துக்க ஒரு கண்டிஷன் போட அதன் பிறகு என்ன நடந்தது என்பதே மீதி கதை.
வாழ்க்கையில் பள்ளி பருவ காதல் என்பது வாழ்நாள் முழுக்க இருக்கும் அழகான நினைவுகள்.அந்ந பள்ளி பருவ காதலை அழகான காதல் கதையாக இயக்குனர் மதன் சொல்லி உள்ளார்.ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ள அபிஷன் ஜீவிந்த இளசுகளின் பேவரிட் நடிகராக மாறி உள்ளார். தமிழில் அனஸ்வரா ராஜன் என்ட்ரி சூப்பர். பேக்ரவுண்ட் ஸ்கோர் மூலம் சான்ரோல்டன் ஸ்கோர் செய்துள்ளார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.