Take a fresh look at your lifestyle.

ஹரி உத்ரா இயக்கம் மாஸ்டர் பிளான்

69

ஹரி உத்ரா இயக்கம் மாஸ்டர் பிளான்
இயக்குனர் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் என பல முகங்கள் கொண்ட செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய படம் ‘மாஸ்டர் பிளான்’ இப்படத்தை உத்ரா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.இதில் தருண் விஜய் மற்றும் சாயா தேவி லீட் ரோலில் நடிக்க, திவ்யா ஜெகத், அப்புகுட்டி, கூல் சுரேஷ், சென்ட்ராயன், வினோத் சாகர், அருண் மைக்கேல் டேனியல், சம்பத் ராம், சாய்தீனா, பருத்தி வீரன் சரவணன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிளாக் ஹூயுமர் கலந்த அரசியல் படமாக இது உருவாகவுள்ளது. இதன் பூஜை நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர்கள் பைவ்
ஸ்டார் கதிரேசன், தேனப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.