தியேட்டரில் அரை சதம் அடித்த கருப்பு
சூர்யா நடிப்பில்,ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி வெளியான படம் கருப்பு.இப்படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் ரூ.340 கோடி வசூலையும் பெற்று சாதனை படைத்தது. அதோடு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜிக்கு புதிய எஸ்.யூ.வி. கார் ஒன்றை, நடிகர் சூர்யா பரிசாக வழங்கினார். இந்த நிலையில் கருப்பு படம் தியேட்டர்களில் 50 நாளை வெற்றிகரமாக கடந்துள்ளது.
Next Post