Take a fresh look at your lifestyle.

திருவாசகத்தின் முதல் பாடலை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்

105

திருவாசகத்தின் முதல் பாடலை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்
இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஜி.வி. பிரகாஷ் குமார் குரலும் இசையும் சேர்ந்து உருவான திருவாசகத்தின் முதல் பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி, ஆன்மிக இசை ரசிகர்களிடையே ஆழ்ந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை யில் ஜி.வி. பிரகாஷ் இசை நிகழ்ச்சியாக வழங்கினார். இந்த முதல் பாடல், ஜி.வி. பிரகாஷின் யுடியூப் சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க வேண்டும் என்பது அவரை நீண்ட நாள் கனவு. அதன் முதல் படியாக இந்த பாடல் ரிலீஸ் ஆகி உள்ளது.