ஒரு வழியா ஸ்ருதிஹாசன் குரலுடன் ட்ரெயின் கிளம்பிடுச்சு…
மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ட்ரெயின் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.கபிலனின் வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடலை நடிகை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார்.இந்தப் படத்துக்கு மிஷ்கினே இசையமைத்துள்ளார். இசை மீது அதீத ஆர்வம் கொண்ட மிஷ்கின், இசை பயிற்சியும் எடுத்துக்கொண்டு தான் இயக்கிய டெவில் படத்தின் மூலம் இசை அமைப்பாளராகவும் அறிமுகமானார்.நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார். இதில் நடிகை டிம்பிள் ஹயாதி, ஈரா தயானந்த், நாசர், வினய் ராய்,பாவனா, சம்பத் ராஜ் ,பப்லு பிருத்விராஜ், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள ட்ரெயின் படம் பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தது தற்போது அப்பிடத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
