விஜய் முதல்வர் ஆனாலும் எங்கள் அக்கா தம்பி பாசம் மாறாது: குஷ்பூ
குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டபுள் ஆக்குபன்சி. இதில் சந்தோஷ், சம்யுக்தா
விஸ்வநாதன், ரேஷ்மாவெங்கடேஷ், வினோத்கிஷன், வி.டி.வி.கணேஷ்,பகவதி பெருமாள் உள்படபலர் நடித்துள்ளனர்.சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தின் இசை மற்றும் டிசர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் குஷ்பூ பேசியது, விஜய்யும், நானும் வேறு வேறு கட்சியாக இருந்தாலும் எங்களுக்குள் உள்ள அக்கா, தம்பி பாசம் மாறவே மாறாது. தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் தான் சினிமா நல்லா இருக்கும் என்பதை புரிந்து கொண்டு, சினிமாவில் இருந்து வந்த முதல்வர் விஜய் ,சினிமா துறைக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
Prev Post