23ம் தேதி எலக்ஷன்: 24ம் தேதி ‘பேட்டில் ‘
எலைட் டாக்கீஸ் சார்பில் கே.பாஸ்கரன் தயாரிப்பில் நாராயணன் பழனி இயக்கியுள்ள படம் ‘பேட்டில்’.இதில் ‘தங்கலான்’ புகழ் அர்ஜுன் பிரபாகரன், ‘காந்தி கண்ணாடி’ புகழ் ஆராத்யா லீட் ரோலில் நடிக்க, அவர்களுடன் இயக்குநர்கள் சுப்பிரமணியம் சிவா, சரவண சுப்பையா, காயத்ரி, முனீஷ்காந்த், உறியடி சுருளி உட்பட பலர் நடித்துள்ளனர். கல்வியில் நடக்கும் வியாபார அரசியலை இசை மற்றும் காதல் கலந்து சொல்லும் இப்படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் நாராயணன் பழனி கூறியது , “தமிழக தேர்தல் தேதியான ஏப்ரல் 23க்கு அடுத்த நாளான ஏப்ரல் 24 அன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது. எனவே 23 அன்று தவறாமல் வாக்களித்து விட்டு, 24 முதல் ‘தியேட்டருக்கு வாருங்கள் என கூறியுள்ளார்.
Next Post