ஈகோ ராமன் விமர்சனம்
அப்பாவை இழந்து அம்மா ஆதரவுடன் வளர்ந்து வருகிறார் சிபி சந்திரன். அவரை எப்படியாவது அரசாங்க வேலைக்கு அனுப்ப வேண்டுமென கனவு கண்டு, அதற்காக இஎம்ஐயில் பைக் ஒன்றை அவரது அம்மா வாங்கித் தருகிறார். மற்றொருபுறம் பள்ளி தலைமை ஆசிரியரான ரோபோ சங்கர், மற்றவர்களை விட தான்தான் உயர்ந்தவன் என்ற ஈகோவில் இருக்கிறார். தனக்கு கீழ் வேலை செய்யும் ஆசிரியர் புது வண்டி வாங்கியதால், அதற்கு போட்டியாக அடுத்த நாளே இவரும் பைக் வாங்குகிறார். அந்த பைக் வாங்கும் ஈகோவுக்கு பின்னால் உள்ள சுவாரசியம் தான் படத்தின் மீதி கதை. ஹீரோவாக நடித்துள்ள சிபி சந்திரன் தனது கேரக்டரை முடிந்தவரை தாங்கி பிடிக்கிறார். ஈகோ குணம் கொண்டவராக ரோபோ சங்கர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்றவர்களும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்துள்ளனர். பள்ளி ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே நடக்கும் உணர்வு போராட்டத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கணேசன் நாச்சிமுத்து. ரெய்மன் ராட்ரிக்ஸ் இசை சுமார் ரகம்.
Prev Post
Next Post