Take a fresh look at your lifestyle.

பிளாஸ்ட் விமர்சனம்

13

பிளாஸ்ட் விமர்சனம்
கராத்தே மாஸ்டரான அர்ஜுன் தனது மகள் பிரீத்தி முகுந்தனை சிறு வயது முதல் தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். அநியாயம் நடந்தால் தட்டிக்கேட்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வளர்கிறார். இந்த நிலையில் கனிம வளங்களை கைப்பற்ற ஒரு கிராமத்தையே அழிக்க முயலும் சக்தி வாய்ந்த கும்பலுடன் அர்ஜுனின் குடும்பம் எதிர்பாராத விதமாக மோதிக்கொள்ளும் சூழல் உருவாகிறது. அந்த மோதலில் இருந்து அவர்கள் எப்படி தப்புகிறார்கள் என்பதே படத்தின் கதை. அர்ஜுனுக்கு ஆக்சன் புதிதல்ல என்பதால் கராத்தே மாஸ்டர் கேரக்டரில் பூந்து விளையாடுகிறார். கவர்ச்சியில் கலக்கிய பிரித்தி முகுந்தன் இதில் ஆக்ஷனில் அசத்தியுள்ளார். இவர்கள் இருவரோடு அபிராமியும் ஆக்ஷனில் கெத்து காட்டி நடித்துள்ளார். பெண்கள் யாரையும் சார்ந்து வாழக்கூடாது, தன்னைத் தானே காத்துக்கொள்ள தெரிந்திருக்க வேண்டும் என்ற கருத்தை ஆக்சன் பேக்கேஜில் சொல்லி உள்ளார் அறிமுக இயக்குனர் சுபாஷ் கே. ராஜ். இருப்பினும் முதல் பாதி ஸ்லோவாக இருப்பது மைனஸ். அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு மற்றும் ரவி பஸ்ரூரின் இசை ரசிக்க வைக்கிறது.