லெனின்’ படத்திலிருந்து ஸ்ரீலீலா விலகியது ஏன் தெரியுமா?
முரளி கிஷோர் இயக்கத்தில் அகில் அக்கினேனி, ஸ்ரீலீலா நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘லெனின்’. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தில் இருந்து ஸ்ரீலீலா விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் ஸ்ரீலீலா படத்திலிருந்து விலகிய காரணம் குறித்து விசாரித்த போது, பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தில் நடிப்பதற்காக ‘லெனின்’ படத்திலிருந்து விலகியிருக்கிறார் ஸ்ரீலீலா. அரசியலில் பிசியாக இருக்கும் பவன் கல்யாணின் கால் சீட்டுக்காக, ஸ்ரீலீலா அந்த படத்தை விட்டு விலகி இருக்கிறார் என்கிறார்கள்.
Prev Post