கென் கருணாஸை பாராட்டிய தனுஷ்
கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள படம் ‘யூத்’.அனிஷ்மா, தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வரும் 19ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் இயக்குனர் வெற்றி மாறன், நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அப்போது தனுஷ் பேசியது, ‘அசுரன்’ பட முதல் நாள் ஷூட்டில் தான் கென்னை பார்த்தேன்.முதல் ஷாட்டிலேயே அவன் நடிச்சதை பார்த்து இவன் கிட்ட ஏதோ ஒரு திறமை இருக்கு’ன்னு வெற்றி கிட்ட சொன்னேன். சின்ன பையனா இருக்கான், ஆனா எல்லார் முன்னாடியும் எந்தத் தயக்கமும் இல்லாம நல்லா நடிக்கிறான். சரியான தேர்வு என்று சொன்னேன். அதனால கென்னை கண்டுப் பிடிச்ச பெருமை முழுக்க முழுக்க வெற்றிக்கு தான் என்றார்.
Prev Post
Next Post