Take a fresh look at your lifestyle.

தனுஷ் நட்பை இழந்தது அவமானம்: விக்னேஷ் சிவன்

2

தனுஷ் நட்பை இழந்தது அவமானம்: விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படம் வரும் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய விக்னேஷ் சிவன், “தனுஷை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை நடிகராக தாண்டி ரொம்ப பெரிய இடத்தில் பார்க்கிறேன். ஏனென்றால் அவருடைய பிறந்த நாள் ஜூலை 28-ம் தேதி, அது தான் எனது அப்பா இறந்த நாள். எனவே அவர் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளேன். சில விஷயங்கள் எதனால் நடந்தது, எப்படி நடந்தது என்று தெரியவில்லை. அவருடைய நட்பை இழந்தது எனது மிகப்பெரிய இழப்பாக நினைக்கிறேன். ஒரு நல்ல நட்பை இழந்துவிட்டதால் அதனை அவமானமாகவும் பார்க்கிறேன் என்றார்.