Take a fresh look at your lifestyle.

பிரசாந்த் படத்தில் தேவயானி மகள்

4

பிரசாந்த் படத்தில் தேவயானி மகள்
இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில், அவரது மகனும் நடிகருமான பிரசாந்த் நடிக்கும் புதிய படமான ரஞ்ஜன் படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியானது.இதில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி இளம் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிகை தேவயானி மகள் பிரியங்கா நடிக்கிறார். பிரஷாந்த்தின் பிறந்த நாள் கொண்டாட்டத் துடன் இவர்களை அறிமுகப்படுத்தும் விழாவும் இணைந்து நடந்தது. இந்த விழாவில் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஃபைவ் ஸ்டார் செந்தில், ஃபைவ் ஸ்டார் கல்யாண், கமல்போரா,சம்பத்குமார், மதியழகன், நடிகர்கள் விஷால்,ஆர்.கே. சுரேஷ், சத்யா, ஆதேஷ் பாலா, மோகன்லால், சந்தோஷ் பிரபாகர், நடிகைகள் கிரண், ஆதிரா, செம்மலர் அன்னம், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, கே எஸ் ரவிக்குமார், சரண் வெற்றிமாறன், துரை செந்தில்குமார் ஸ்ரீகணேஷ், கணேஷ் கே. பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.