அல்லு அர்ஜுன் பட டைட்டில் ராக்கா
இயக்குநர் அட்லீ இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஃபாண்டஸி, ஆக்ஷன் படத்துக்கு “ராக்கா” என டைட்டில் வைத்துள்ளனர். உலக அளவிலான ரசிகர்களை கவரும் வகையில் தயாராகி வரும் இந்த படத்தின் டைட்டிலை நடிகர் அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் முற்றிலும் புதுமையான அவதாரத்தில் தோன்றவுள்ளார். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, சக்திவாய்ந்த மற்றும் மாற்றத்தைக் காட்டும் ஒரு வேடமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Prev Post
Next Post