Take a fresh look at your lifestyle.

ஜெய்வந்தை மறக்க வைத்த டிடிடி தியாகு!!

147

ஜெய்வந்தை மறக்க வைத்த டிடிடி தியாகு!!
ஜீவா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் தியாகு கேரட்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஜெய்வந்த்.மத்திய சென்னை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர் காட்டுப் பய சார் இந்த காளி, விடுதலை 2 ஆகிய படங்களில் ஏற்கனவே நடித்துள்ளார். தற்போது டிடிடி படம் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இது குறித்து ஜெய்வந்த் அளித்த பேட்டியில் கூறியது, ஜீவா ஹீரோ வாக இருந்தாலும் எனக்கு படத்தில் நல்ல இடத்தை கொடுத்து நடிக்க வைத்தார். வெற்றி மாறன் பல்கலைக் கழகத்தில் தேர்ச்சி பெற்று வந்த பிறகு இந்த படம் கிடைத்துள்ளது. ஹீரோ, வில்லன் மற்றும் கேரக்டர் ரோல் எது கொடுத்தாலும் நடிக்க தயார்.எனக்கு இப்போது தெளிவு கிடைத்து உள்ளது. நிறைய கதைக் கேட்டுள்ளேன்.விரைவில் நல்ல செய்தி வரும். அதோடு ஒரு தயாரிப்பு நிறுவனமும் தொடங்கி உள்ளேன் என்றார்.