Take a fresh look at your lifestyle.

கவின் படத்தில் இணைந்த சிம்ரன்

151

கவின் படத்தில் இணைந்த சிம்ரன்
இயக்குனர் கென் ராய்சன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவின், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ‘திங்க்’ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஏற்கனவே சாண்டி மாஸ்டர் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் தற்போது நடிகை சிம்ரனும் நடிக்கிறார். சிம்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் கடந்த வாரம் பூந்தமல்லியில் 3 நாட்கள் படமாக்கப்பட்டது. கலகலப்பாகவும், ஜாலியாகவும் உருவாகி வரும் படத்தில் சிம்ரனும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.‘டூரிஸ்ட்பேமிலி’ படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ள சிம்ரன் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் சிம்ரனை தேடி புதிய படவாய்ப்புகள் குவிந்து வருகிறது.