சேரன் தான் என்னோட பெஸ்ட் பிரண்ட்: சினேகா
சேரன் இயக்கிய நடித்த ஆட்டோகிராப் படம், 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல்
தொழில் நுட்பத்தில் வரும் 14-ந் தேதி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது. இதை ஒட்டி நடந்த ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சினேகா பேசியது, இந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு நிறைய மன அழுத்தம் தனிப்பட்ட முறையில் இருந்தது. அது யாருக்குமே தெரியாது. வெளியில் சிரித்துக்கொண்டே
இருப்பேன். என்னுடைய மன கஷ்டத்தை கண்டுபிடித்த ஒரே நபர் சேரன். படப்பிடிப்பு தளத்தில் ஒருநாள் அமர்ந்திருந்த போது சேரனுக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை. என் அருகில் வந்து அமர்ந்தார்.உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார். நான் ஒன்றும் இல்லை என கூறினேன்.அதற்கு அவர் இல்லை..இல்லை.. ஏதோ பிரச்சினையில் இருக்கிறீர்கள் என்று தெரியும். எல்லாம் சரியாகிவிடும் ‘ஓகே’ என கூறினார். அன்று நாங்கள் நண்பர்களானது தான் இன்று வரை நண்பர்களாக இருக்கி றோம்.என்னோட ‘பெஸ்ட் பிரண்ட்’ சேரன் தான் என்றார்.
Prev Post