Take a fresh look at your lifestyle.

500 தியேட்டர்களில் மீண்டும் ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்’

90

500 தியேட்டர்களில் மீண்டும் ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்’
விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியான இந்த படம் கேப்டன் ரசிகர்களை மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. அதோடு ‘கேப்டன்’ என்கிற பெயரையும் அவருக்கு பெற்று தந்தது. இப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4கேதொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 500 திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. ஸ்பேரோ சினிமாஸ் சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்.