அஜித்- யுவன் திடீர் சந்திப்பு
அஜித் நடித்த தீனா முதல் வலிமை வரை பல படங்களுக்கு இசை அமைப்பாளராக பணி புரிந்தவர் யுவன் சங்கர் ராஜா. ஆனால் சமீபத்திய அஜித் படங்களுக்கு இவர் இசையமைக்க வில்லை. இந்நிலையில் யுவன் திடீரென அஜித்தை சந்தித்து பேசி உள்ளார். குண்டு பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் ஆதிக் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார் என ஆதிக் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் அஜித்துடன் யுவன் சந்தித்து பேசியுள்ளார். ஒருவேளை வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா 2 படம் குறித்த இருக்குமோ என்றும் கூறப்படுகிறது.
Prev Post