சூர்யா நடிக்கும் படத்தின் டைட்டில் கருப்பு
மெட்ரோ படத்தை தொடர்ந்து நடிகர், இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வரும் படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இதில் ஹீரோயின் ஆக திரிஷா நடிக்கிறார்.
இவர்கள் இருவரும் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இதில் ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர் நிறுவனம் தயாரிக்கப்படுகிறது. பொள்ளாச்சி கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த நிலையில் இயக்குனர் ஆர் ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது. படத்திற்கு கருப்பு என தலைப்பு வைத்துள்ளனர்.


