‘ அடடா’ ராப் பாடல் வெளியீடு
தமிழ் ஹிப்ஹாப் இசையின் தனித்துவமான குரல்களாக விளங்கும் கில்லா கே மற்றும் பால் டப்பா இணைந்து ‘அடடா’ என்ற ராப் பாடலை வெளியிட்டுள்ளனர். இதை டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளனர். கூர்மையான வரிகள், மனதில் பதியும் ஹூக்ஸ் மற்றும் துடிப்பான இசை ஆகியவற்றுடன் உருவாகியுள்ள ‘அடடா’, தமிழ் சினிமாவின் பழைய நினைவுகள் மற்றும் அடையாளம், தொடர்ந்து பரிணமித்து வரும் பிராந்திய ராப் இசை ஆகியவற்றை உற்சாகமாகக் கொண்டாடுகிறது. புகழ்பெற்ற ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்திலிருந்து உருவாகியுள்ள ‘அடடா’, அந்தப் படத்தின் பிரபலமான காட்சியமைப்பை இன்றைய தலைமுறைக்கேற்ற வகையில் மாற்றி வடிவமைத்துள்ளனர்.
Prev Post
Next Post