தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, தவெக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கட்சியின் தலைவர் விஜய் இன்று நடைபெறும் நேர்காணலில் நேரடியாகப் பங்கேற்று, விருப்பமனு அளித்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.