Take a fresh look at your lifestyle.

மீண்டும் அர்ஜுன் ஜோடியாக அபிராமி

50

மீண்டும் அர்ஜுன் ஜோடியாக அபிராமி
ஏஜிஎஸ் என்டர்டெயின் மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் படம் ‘பிளாஸ்ட்’மேலும் இதில் ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். ‘கே ஜி எஃப்’ படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் 28-வது படமாக இது உருவாகி வருகிறது . இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.