ரஜினிக்கு வில்லனாகும் டைரக்டர் ஷங்கர்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் முடிந்ததை தொடர்ந்து அடுத்ததாக தனது 173 வது படத்தில் ரஜினி நடிக்க உள்ளார்.
இப்படத்தை டான் பட இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்க போவது கன்பார்ம் ஆகி உள்ளது.ரஜினியுடன் ஷோபனா, சிம்ரன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். படத்திற்கு சாய் அபயங்கர் அல்லது ஜி.வி. பிரகாஷ் அமைப்பார்கள் என கூறப்படுகிறது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் தயாரிக்கின்றனர். இந்த நிலையில் படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல இயக்குனர் ஷங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Prev Post
Next Post