Take a fresh look at your lifestyle.

கபாலீசுவரர் திருக்கோயில் வாடகை நிலுவை தொகையை செலுத்தியது தனியார் நிறுவனம்.

1

கபாலீசுவரர் திருக்கோயில் வாடகை நிலுவை தொகையான 8.77 கோடி ரூபாயை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.ரமேஷ் அவர்களின் உத்தரவின் பெயரில் செலுத்தியது தனியார் நிறுவனம்.

சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்திற்கான நீண்ட நாள் நிலுவை வாடகை பிரச்சனைக்கு அமைச்சர் ரமேஷ் அவர்களின் தீவிர முயற்சியால் தீர்வு கிடைத்துள்ளது.

மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் சர்வே எண்.3333ல் உள்ள 14 கிரவுண்ட் 910 சதுரஅடி நிலம் கோயிலுக்கு சொந்தமானதாகும். இந்நிலம் 1901-ம் ஆண்டு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு அமிர்தான்ஜன் நிறுவனத்திற்கு விடப்பட்டிருந்தது.

அரசாணைப்படி 01.11.2001 முதல் நியாய வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை எதிர்து அமிர்தான்ஜன் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த W.P.No.35484/2005 வழக்கு 25.09.2025 அன்றும், மேல்முறையீடு வழக்கு W.A.No.205/2026 மற்றும் மறு ஆய்வு மனு வழக்கு R.A.No.111/2026 ஆகியவை முறையே 16.03.2026 மற்றும் 30.04.2026 அன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலின் இணை ஆணையர்/செயல் அலுவலர் 02.05.2018 வரையிலான வாடகை நிலுவை ரூ.9,74,67,151/- வசூலிக்க இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு *79(சி)*ன் கீழ் ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டு 18.07.2026 அன்று 15 நாட்கள் அவகாசம் அளித்து ஜப்தி அறிவிப்பு சார்வு செய்யப்பட்டது. அதன்படி 02.08.2026க்குள் செலுத்த வேண்டும்.

தற்போது (01.08.2026) அமிர்தான்ஜன் நிறுவனம் 10% TDS தொகை ரூ,97,46,715/- பிடித்தம் போக ரூ.8,77,20,436/-ஐ திருக்கோவிலுக்கு வரைவோலையாக செலுத்தியுள்ளனர். இத்தொகை திருக்கோயில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. TDS தொகை வருமான வரி துறையிடமிருந்து திரும்ப பெற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.