புதுமுகங்கள் நடிக்கும் குதிரைக்கொம்பு
ஆப்பிள் மூவீஸ், யாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் ரமேஷ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள குதிரைக்கொம்பு படத்தை அய்யனார் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இதில் இல்லியஸ், ராம்ராஜ், ரமேஷ்,பிரவீன், சௌகத் அலி,சனா ஸ்ரீ, துர்கா ,லாவண்யா, வேல்ராஜ் ,மம்முட்டி,சிங்காரவேலன்,சேகர்,
சண்முகம், ரவி ,சரவணன், கணேஷ் ஆகியோருடன் இயக்குனர் அய்யனார் கிருஷ்ணனும் நடித்துள்ளார். படத்திற்கு ஏ.எஸ்.ராஜ், ஜெய்குமார் ஒளிப்பதிவு செய்ய, சௌகத் அலி இசை அமைத்துள்ளார்.இதில் மூன்று பாடல்களுடன் மூன்று சண்டைக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு சேலம், ஏற்காடு,பாலக்காடு ஆகிய இடங்களில் 55 நாட்களில் நடந்து முடிந்துள்ளது.
Prev Post
Next Post