Take a fresh look at your lifestyle.

சர்ச்சையை மீறி வசூலை குவிக்கும் கிங்டம்

143

சர்ச்சையை மீறி வசூலை குவிக்கும் கிங்டம்
விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ நடிப்பில் கடந்த 1-ந் தேதி வெளியான கிங்டம் படம் பல்வேறு விமர்சனங்களை கடந்து வசூலை குவித்து வருகிறது. படம் வெளியாகி நான்கு நாட்களில் 82 கோடி வசூலை குவித்த இப்படம் 100 கோடி கிளப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி படத்திற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கிங்டம் படம் ஓடும் தியேட்டர்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பட தயாரிப்பு நிறுவனமான
சித்தாரா என்டர்டெயின்மென்ட் கூறியது, இப்படம் கற்பனை கதை என்றும், அதை மீறி மக்களின் உணர்வு புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.