Take a fresh look at your lifestyle.

நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே

143

நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே
மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே, அதன் பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே சரியாக போகாததால் தெலுங்கு பக்கம் சென்றார். தெலுங்கில் பூஜா ஹெக்டே நடித்த பல படங்கள் அடுத்தடுத்து ஹிட் அடித்த நிலையில், ராதே ஷ்யாம், ஆச்சார்யா உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு தோல்வியாக அமைந்தன. இதனால் மீண்டும் தமிழில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கிய அவர், சூர்யாவுடன் ரெட்ரோ, விஜய்யுடன் ஜனநாயகன், லாரன்ஸ் உடன் காஞ்சனா 4 ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். அதோடு ரஜினியின் கூலி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடி உள்ளார். இந்நிலையில் தெலுங்கில் நிதின் நடிக்கும் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார். விக்ரம் கே.குமார் இயக்கும் இந்த படத்திற்கு ஸ்வாரி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.