Take a fresh look at your lifestyle.

நான் ரஜினியின் தீவிர ரசிகை: சிம்ரன்

151

நான் ரஜினியின் தீவிர ரசிகை: சிம்ரன்
தமிழ் படங்களில் மீண்டும் கவனம் செலுத்தி வரும் சிம்ரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அந்தகண், டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெற்றது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் சிம்ரன் அளித்த பேட்டியில் கூறியது, ரஜினி நடித்துள்ள கூலி படத்தின் டிரெய்லர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகை.

பேட்ட ஷூட்டிங்கின் போது ரஜினியை நான் பார்த்துக் கொண்டே இருப்பேன்.இதை யாரும் கவனித்திருக்க மாட்டார்கள். ரஜினி உடன் நடித்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அவரைப் போல் எளிமையான நடிகர் யாரும் இல்லை. விழாக்களில் பங்கேற்கும் போது கூட எந்தவிதமான மேக்கப் இல்லாமலும் இயல்பாக வருவார். ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் மிகப்பெரிய உதாரணமாக இருக்கிறார் என்றார்.